அரபிக்கடலில் விபத்துக்குள்ளான கப்பலில் 9 பேரை இந்திய கடற்படை மீட்டனர்.

5 months ago


அரபிக்கடலில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 16 பணியாளர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களில் 9 பேரை இந்திய கடற்படையினர் மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் கப்பலின் இரண்டாவது அதிகாரி குகநேசன் மகேசதாசன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவர்.

கப்பல் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் கப்பலின் கெப்டன் இலங்கையை சேர்ந்த கே. வைத்தியகுமார் எனவும், அவரின் கையடக்க தொலைபேசி வேலை செய்வதாகவும் அவருடைய மகள் துளசி வைத்தியகுமார் எமக்கு வழங்கிய பிரத்தியேக தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்