அம்பாறை, பொத்துவிலில் உள்ள கடற்கரை பிரதேசமான அறுகம்குடா பிரதேசம் சோதனை நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது.
அம்பாறை, பொத்துவிலில் உள்ள கடற்கரை பிரதேசமான அறுகம்குடா பிரதேசம் சோதனை நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது..
இஸ்ரேல் சுற்றுலாப் பணிகள்மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான எச்சரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுகிறது.
அங்கு தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிஸ், விசேட அதிரடிப் படை, கடற்படை, இராணுவம் மற்றும் அரச புலனாய்வு சேவைகள் பொத்துவில், அருகம்குடா விரிகுடாவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம்குடா பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் பயண ஆலோசனையை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அலைச்சறுக்கு பொழுது போக்கு செயல்பாடுகளில் ஈடுபட இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அறுகம்குடா மற்றும் பொத்துவில் மிகவும் விருப்பமான விடுமுறை இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அறுகம்குடா வருகை தருகின்றனர்.
அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சமீப காலங்களில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
பூர்வாங்க நடவடிக்கையாக பொலிஸார் ஏற்கனவே வீதித் தடைகளை அமைத்துள்ளதாகவும் வாகனங்கள் மற்றும் பொது மக்களின் வழமையான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் இஸ்ரேலியர்கள் மீது விரோதம் உள்ளவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காகவே "சினகொக்" பகுதியில் பொலிஸார் மற்றும் பிரதான வீதிகளில் அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரி வித்தார்.