இலங்கை-ஜோர்தான் புரிந்துணர்வு உடன்பாடு

5 months ago


இலங்கை மற்றும் ஜோர் தான் அரசாங்கங்கள் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத் துவதற்கும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தகவல் படி, ஜோர்தானில் உள்ள இலங்கை தூதுவர் பிரியங்கிகா விஜேகு ணசேகர மற்றும் ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் மஜேத் தாலிஜி அல்கதர்னே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதன் மூலம் ஜோர்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதுடன், மக்களிடையே அதிகளவான தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மறு பரிசீலனை செய்வதற்கும், பொதுவான நலன்களின் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும் என இலங்கைக்கான தூதுவர் கூறினார்.