இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.

3 months ago


இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்ததை அடுத்து அமையவுள்ள உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வுள்ளார்.

பொதுத்தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமையும் வரை செயற்படும் இடைக்கால அரசில், 4 பேர் கொண்ட உறுப்பினர்கள் 15 அமைச்சுகளை பகிர்ந்து கொள்ளவுள்ளனர் என அறிய முடிகின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு பெண்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.

1960 ஜூலை 21 ஆம் திகதி முதல் 1965 மார்ச் 25 ஆம் திகதிவரை         ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்துள்ளார். உலகில் முதல் பெண் பிரதமர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. பிறகு 1970 முதல் 77 வரையும் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

விக்கிரமசிங்க தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின்  கூட்டத்திலேயே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.

அதன்பின்னர் 1994 ஓகஸ்ட் 19 ஆம் திகதி முதல் 1994 செப்ரெம்பர் 12 ஆம் திகதிவரை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராக பதவி வகித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றதும் தனது தாயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை சந்திரிக்கா பிரதமராக்கினார். 1994 நவம்பர் 14 ஆம் திகதி முதல் 2000 ஓகஸ்ட் 9 ஆம் திகதிவரை அவர் பிரதமராக செயற்பட்டார்.

2000 ஆம் ஆண்டுக்கு பின்னர்      ரத்னசிறி விக்ரமநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, தி.மு.ஜயரத்ன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 2 தசாப்தங்களுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமராக பதவி யேற்கின்றார். 

அண்மைய பதிவுகள்