பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நியமனம் ஜூன் முதலாம் திகதி முதல் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் கடமைகளிலிருந்து சவேந்திர சில்வா விலகியதன் பின்னர் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அரசால் அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
