கனடாவின் ரொறன்ரோ நகரில் பாரியளவு மழை வெள்ளம் ஏற்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 11 ஆண்டுகளில் ரொறன்ரோவில் பதிவான இரண்டாவது பாரியளவு வெள்ள நிலைமை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் தொடர்பிலான கொள்கைகள் நடைமுறைபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டில் 90 நிமிடங்களில் 126 மில்லி மீற்றர் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மழை மற்றும் புயல் காற்றினால் கூடுதல் அளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
டோன்வெலி போன்ற பகுதிகளில் பாரியளவில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினால் நகரின் சில அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் நூறு மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்ததாகவும் புயல் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக ரொறன்ரோவின் 170000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.