முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினைச் சேர்ந்த 27 வயது ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 20 இலட்சம் பணத்தினை கொண்டு யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடிதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பின்னர் குறித்த நபரின் தொலைபேசி வேலை செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவரது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பின்னர், வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) பகுதியில் உடலம் கிடப்பது அடையாளம் காணப்பட்டு பிரதேச வாசிகளால் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன் குளம் பொலிஸார் நீதிபதி முன்னிலையில் உடலத்தினை மீட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்போது மல்லாவி பகுதியைச் சேர்ந்த சசி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பாண்டியன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்