அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கு கனடாவில் கூடுதல் ஆதரவு.

2 months ago



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கு கனடாவில் கூடுதல் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடியர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தாப்பம் கிடைத்தால் என்ற அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது கமலா ஹரிஸிற்கு அதிகளவான கனடியர்கள் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்களில் 64           வீதமானவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் கமலா ஹரிஸிற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.

55 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடுதல் எண்ணிக்கையில் இவ்வாறு ஹாரிஸிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.