அவசரநிலை தயார்படுத்தலை மேம்படுத்தும் அமெரிக்கா மற்றும் இலங்கை

1 month ago



'இலங்கையை பொறுத்த வரையில், பல்வேறுபட்ட உற்பத்தி கைத்தொழில்களிலும் மற்றும் மருந்தாக்கல் நிறுவனங்களிலும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிப்பொருள் (chemical, biological, radiological, nuclear and explosive - CBRNE) இயக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

என்பதுடன், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாக மட்டுமேயன்றி இயற்கை அபாயங்களால் தூண்டப்படும் தொழில்நுட்ப விபத்துகளாகவும் இருக்க முடியும்.

பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் அனர்த்த முகாமைத்துவ நிலையம் CBRNE பேரிடர் அபாய குறைப்பின் நிமித்தமான ஒருங்கிணைந்த திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதுடன், இருப்பிலுள்ள திறன்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை அடையாளம் காண்பதற்கு சம்பந்தப்பட்ட பங்குதாரர் முகவரமைப்புகள் மற்றும் பகுப்பாய்வு உத்திகளுடன் தேசிய மட்டத்திலான தளமொன்றையும் ஸ்தாபித்துள்ளது,'

என்று தெரிவித்து CBRN அபாயம் மற்றும் தயார் நிலைக்கான இலங்கையின் உறுதிப்பாடு என்பன சம்பந்தமான தொடர்புகளை இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எச்.எம்.யு. ஹேரத் சுட்டிக்காட்டினார். 

CBRN தயார்நிலை தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்வதன் அவசியம், பாரிய நெருக்கடியொன்றின் போது பதிலளிப்பு பற்றிய செயன்முறை தொடர்பில் தொடர்ச்சியான பயிற்சிகளின் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய பங்காண்மையாளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் பெறுமதி போன்றவற்றை இந்த செயலமர்வு சுட்டிக்காட்டியது.

பங்கேற்கும் நாடுகளின் பதிலளிப்பு ஆற்றல்கள் மற்றும் இடைவெளிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால ஒத்துழைப்புக்கு சாத்தியமான பரப்புகளை கண்டறியுமாறும் பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். 

இந்த செயலமர்வானது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் பரவல் தடுப்பு பணியகத்தைச் சேர்ந்த பாரிய அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத ஆயுதங்கள் பற்றிய அலுவலகத்தின் தலைமையிலான தொடர் நிகழ்வுகளின் அங்கமொன்றாகும் என்பதுடன், உலகளவிய ரீதியில் அதிகரித்து வரும் CBRN ஆயுத பயன்பாடுகளை தடுப்பதற்கும் மற்றும் அவை தொடர்பிலான பாதுகாப்பிற்கும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவற்காவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 



அண்மைய பதிவுகள்