நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து சுமார் 200 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டம்..
7 months ago

விக்கிரவாண்டியில் நடக்கும் நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து சுமார் 200 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் கொடியை கடந்த வாரம் சென்னை பனையூரில் அறிமுகம் செய்தார். அப்போது, “கட்சிக்கான கொள்கை விவரம், கொடியின் விளக்கம் குறித்து விரைவில் நடக்க இருக்கும் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் விரிவாகப் பேசப்படும் என்று விஜய் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து செப். 23இல் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகளை த. வெ.க நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
