2025 இல் 340,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வர் -- இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் எதிர்வு கூறியுள்ளது

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எதிர்வு கூறியுள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் கோசல விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனாநாயக்க-
2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகள் ஊடாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
2024 இல் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்ற தொழிலாளர்களில் 65 வீதம் பேர் தொழில்முறை வேலைகளுக்கும் 35 வீதம் பேர் குறைந்தபட்ச தொழில்சார் வேலைகளுக்கும் சென்றனர்.
2025 ஆம் ஆண்டில் 75 வீதமான தொழிலாளர்களை தொழில்சார் வேலைகளுக்கும் 25 வீதமானவர்களை குறைந்தபட்ச தொழில்சார் வேலைகளுக்கும் வழிநடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, குவைத்துக்கு 84,000 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு 55,000 பேரும், சவுதி அரேபியாவில் பணியிடங்களுக்கு 52,000 பேரும் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பணியகம் 15,900 இஸ்ரேலிய வேலைகளையும், ஜப்பானில் 9,000 வேலைகளையும், 8,000 தொழிலாளர்களையும் தென் கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
