முல்லைத்தீவு இலங்கை விமானப்படை முகாமை "தடுப்பு மையமாக" பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
3 months ago

இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமை "தடுப்பு மையமாக" பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த திங்கட்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.
முல்லைத்தீவு விமானப்படைத் தளம் தடுப்பு முகாமாக செவ்வாய்க்கிழமை (31) முதல் இயங்கவுள்ளது.
கடற்படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட 103 மியான்மர் அகதிகள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போதிலும், மிரிஹான தடுப்பு முகாமில் போதிய தங்குமிட வசதிகள் இல்லாததால், இந்த அகதிகளை முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
