ஆசிரியைகள் இடமாற்றம் கோரி வடமாகாண கல்விப் பணிப்பாளர் குயிண்ரஸிடம் சென்றால் பாலியல் இலஞ்சம் கேட்பதாக ஆசிரியைகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் இடமாற்றமின்றி பல வருடங்களாக வன்னியில் பணியாற்றுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இடமாற்றம் கோரி வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு செல்லும் ஆசிரியைகளை தனது அக்காவின் வீடான மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்.
அந்த வீடு ஏற்கெனவே விபச்சார விடுதியாக இயங்கியால் பொலிஸாரின் முற்றுகைக்கு உட்பட்டு 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீட்டில் தான் குயிண்ரஸிற்கு இரு அறைகள் இருப்பதாகவும், அந்த அறையில் தான் இடமாற்றம் கோரி வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு செல்லும் ஆசிரியர்களை சந்திக்க வருமாறும் வராவிட்டால் இடமாற்றம் கிடையாது என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கில் பதவிக்கு வந்தவர் தனக்கு அமைச்சர் துணை நிற்கிறார் தன்னை எவருமே ஒன்றுமே செய்ய முடியாது என்ற திமிரில் இருக்கிறார்.
இவரின் முறைகேடு தொடர்பில் யாழ்ப்பாண பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனால் பத்திரிகைகளையும் முடக்கி ஊடகவியலாளர்களையும் சிறையில் அடைக்கும் மட்டும் பாடசாலைகளை முடக்கி போராட்டம் செய்வேன் என்று அறிவித்துள்ளார்.
இவரின் சீர்கெட்ட நடத்தையால் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பயத்துடன் பணிக்கு சென்று வருகின்றனர்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தில் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக குயிண்ரஸிடம் ஒட்டி உறவாடும் பெண் ஊழியர்கள் குடும்பங்களுக்குள் நாளாந்தம் பிரச்சினை எழுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இவரால் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் எழுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரால் கல்வி சீரழிவதுடன் பண்பாடும் சீரழிகிறது.
வடமாகாண கல்வித் திணைக்களத்தை சீர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இல்லாது போனால் கல்வித் துறையைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை.