யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு
முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று சனிக்கிழமை (13 ) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியால் நேற்று முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த திட்டமானது 25 மாவட்டங்களிலும் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இன்று 13 ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவாகிய மாணவர்களுக்கன புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விருந்தினர்கள் மாணவர்களின் கலச்சார நிகழ்வுகளுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.