யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

2 months ago



யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலுமில்லம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் இன்றைய தினம் (02) ஆரம்பிக்கப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உட்பட பலர் இந்த சிரமதானப் பணிகளில் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்