இலங்கையில் இவ்வருடம் வரி செலுத்த வேண்டியவர்கள் 160 வீதத்தால் அதிகரிப்பு.-- உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவிப்பு
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 160 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
2023/2024 ஆண்டுக்கான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 8 இலட்சத்து 68 ஆயிரத்து 9 பேர் வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இது முந்தைய ஆண்டில் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 313 ஆக இருந்தது.
வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சொத்து வைத்திருப்பவர்களை இலக்காகக் கொண்டு பதிவு முயற்சிகளை விரிவுபடுத்திய உள்நாட்டு வருமான சட்டத்தில் சமீபத்திய திருத்தங்கள் வரி செலுத்துவோர் வளர்ச்சிக்குக் காரணம்.
பல புதிய பதிவுகள் வரி செலுத்துவோர் அடையாள எண்களுடன் (ரி.ஐ. என்.) இணைக்கப்பட்டுள்ளதாக இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் அல்லது வருடம் 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமான மீட்டுவோர் தங்கள் வருமான அறிவிப்பை ஒன்லைன் மூலம் இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமானது என்பது தெரிந்ததே.