கடந்த கால கொலைகள் தொடர்பான விசாரணைகளை மீள தொடங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

2 months ago



வசீம் தாஜூதீன் கொலை, லசந்த விக்ரம துங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக் னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான முடிக்கப்படாத விசாரணைகளை மீள தொடங்கியுள்ளதாகவும் அவற்றை எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சில விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் நடந்த அனைத்து குற்றங்கள் குறித்தும் விசாரணைகளைத் தொடங்கி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்தார்.

இந்த விசாரணைகள் அனைத்தும் அரசியல் நலன்களின் அடிப்படையில் நடத்தப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குற்றவியல் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்