
இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹெஸ்புல்லாவின் வான் வழித் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு சமிக்ஞைகள் ஒலிக்கப்படும் போது, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங் களுக்கு சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
