திருகோணமலை தன்வந்திரி வைத்தியசாலை உரிமையாளரின் மனைவி இன்று வைத்தியசாலையில் வைத்து வெட்டிப் படுகொலை

2 months ago



திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இன்று காலை கொலையுண்டவர் கொழும்பில் இருந்து வீடு திரும்பி அறைக்குள் சென்றபோதே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது.

சடலம் பொலிஸாரால்    பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பில்          திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொலையாளி எனச் சந்தேகிக்கப்படுபவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து நிரந்தரமாக இலங்கை திரும்பி,சம்பவம் நடைபெற்ற திருகோணமலையில் உள்ள தமது வைத்தியசாலையில் தங்கியிருந்தார் என்றும், அதேநேரம் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்குரிய சிகிச்சையைப் பெற்று தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்றும் இவரது மூத்த சகோதரும் கொலையானவரின் கணவருமான பொது வைத்திய நிபுணர் மருத்துவர் கனேகபாகு தெரிவித்தார்.

கொலையாளியின் மனைவி மற்றும் மகள் இலண்டனில் வசிக்கின்றனர். கொலையானவரின் தங்கையே இவரது மனைவியாவார்.

மனநிலைப் பாதிப்பால் ஏற்படும் அதீத கோபத்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

கொலையானவர் நேற்று இரவு மூன்று மாதங்களின் பின் இலண்டனில் இருந்து இலங்கை திரும்பி அன்று இரவு                 கொழும்பிலிருந்து திருகோணமலை திரும்பி இருந்த நிலையில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அண்மைய பதிவுகள்