அமெரிக்கா, கனடா, பிரிட்டன் சீக்கியர்களுக்கு 30 நிமிடங்களில் ஒன்லைனில் இலவசமாக வீசா.-- பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

2 months ago



அமெரிக்கா, கனடா, பிரிட்டனைச் சேர்ந்த சீக்கியர்களுக்கு 30 நிமிடங்களில் ஒன்லைனில் இலவசமாக வீசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாகிபு நகரில் பிறந்தார்.

அவரது நினைவாக அங்கு குருத்வாரா உள்ளது.

இதேபோன்று பாகிஸ்தான் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன.

இந்தியா மட்டுமன்றி உலகம்        முழுவதும் வாழும் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்கின்றனர்.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி கூறுகையில், "முஸ்லிம்களின் புனித பூமியாக சவுதி அரேபியா விளங்குகிறது.

இதேபோன்று சீக்கியர்களின் புனித பூமியாக பாகிஸ்தான் உள்ளது.

ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த எண்ணிக்கையை 10 இலட்சமாக உயர்த்த விரும்புகிறோம்.

பாகிஸ்தானுக்கு வரும் சீக்கியர்கள் வீசா பெறுவதில் சில சிரமங்களை சந்திப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்லைன் இலவச வீசா திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம்”- என்றார்.