ஈரானில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு நீதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

6 hours ago



ஈரானில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு நீதிபதிகள் கொல்லப்பட்டனர்.

ஈரான் தலைநகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெஹ்ரானில் உள்ள தீர்ப்பாய கட்டிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு போன்றவற்றிற்கு எதிரான விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த நீதிபதிகளே கொல்லப்பட்டுள்ளனர் என ஈரானின் நீதித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைத்துப்பாக்கியுடன் நுழைந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என ஈரானின் நீதித்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்