தமிழ்த் தரப்புகள் இனியாவது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு
தமிழ்த் தரப்புகள் இனியாவது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு
அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தரப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (17) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
"இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இதனை உணர்ந்து கொண்டு தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட வேண்டும்.
வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்படப் போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படக்கூடும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் தனித்து நின்றால் அவற்றினையும் தமிழர் தரப்பு பறிகொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதனை உணர்ந்து தமிழ்த் தரப்புகள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக கூட விடுகின்றோம்.
தேர்தலில் தோற்றுப்போனவன் என இதனை பலர் எள்ளி நகையாடலாம்.
அவ்வாறில்லாமல் தமிழ்த் தலைமைகள் ஒன்று பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிளவுபட்ட தமிழர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டுமென விரும்பவில்லை.
கூட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவில்லை.
ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ்த் தரப்பு ஒன்றிணைய வேண்டும்.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்காளர்களை மலினப்படுத்த விரும்பவில்லை.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் ஒண்றிணைந்து செயல்பட வேண்டும்.
பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அவர்கள் தான் உடைத்தார்கள். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்களின் ஈகோ மற்றும் ஆசன பங்கீடும் காரணமாக அமைந்திருந்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.