இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம், தமது நாட்டுப் பிரஜைகள் அவதானமாக இருக்கவும் -- பிரிட்டன் எச்சரித்துள்ளது

1 month ago



இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் தமது நாட்டுப் பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரிட்டன் எச்சரித்துள்ளது.

பலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்புக்கு காரணமாக சர்வதேச ரீதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அல்கைதா,டேஷ் போன்ற அமைப்புகள் தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமது ஆதரவு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

யூதர்கள், முஸ்லிம்கள், இஸ்ரேலுக்குச் சார்பானவர்களை இலக்கு வைத்து முன்னெச்சரிக்கையின்றியே தனி நபர்கள் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம்.

எனவே பிரித்தானியப் பிரஜைகளை பொதுமக்கள் கூடுமிடங்களில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்குமாறும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்