யாழ்.காரைநகர் கசூரினா சுற்றுலா மையத்துக்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா

2 months ago



உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளுார் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் - மாகாண சபைகள் மற்றும் உள்ளுாராட்சி அமைச்சால் செயல்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட கசூரினா சுற்றுலா மையத்துக்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் கிருஷ்ணானந்தம் விஜயேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து சிறப்பித்தார்.