கிளிநொச்சி, மலையாளபுரம் இந்திய உதவி வீட்டுத் திட்ட மாதிரிக் கிராம திறப்பு விழா நேற்று முன்தினம்(17) நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட "திருவள்ளுவர் குடியிருப்பு" இந்திய உதவி வீட்டுத்திட்ட மாதிரிக் கிராமமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
கிராமிய நகர வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அநுர கருணாதிலகவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டு மாதிரிக் கிராம வீடுகளை கையளித்தார்.
இந்த நிகழ்வில், கிராமிய நகர வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.