இலங்கை ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிக்களிப்பில் மக்கள்

3 months ago



இலங்கை ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிக்களிப்பில் மக்கள் கேக் வெட்டி, பொங்கல் செய்யும் கொண்டாடினர்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் பொங்கல் பொங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரிலும், அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையை ஆதரித்து பொதுமக்கள் கொண்டாடியுள்ளனர்.

மன்னார் நகர்புற பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power )மன்னார் மாவட்ட கிளையினால் குறித்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் போது பொங்கல் பொங்கி மக்களுக்கு வழங்கப்பட்டு தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர்.

திருகோணமலை நகர் பகுதியிலும் அவரது கட்சி ஆதரவாளர்கள்பட்டாசு கொளுத்தி வெற்றிக் களிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கிண்ணியா புஹாரியடி சந்தியில் அரவது கட்சி ஆதரவாளர்கள் திசை காட்டி வடிவிலான கேக் கினை வெட்டி வெற்றிக் களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.






அண்மைய பதிவுகள்