தபால் மூல வாக்களிப்பு வாக்குச் சீட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவருக்கு எதிராக முறைப்பாடு.
தபால் மூல வாக்களிப்பு வாக்குச் சீட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவருக்கு எதிராக முறைப்பாடு.
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்ததாக அரசியல் கட்சி ஒன்றின் மத்திய குழு உறுப்பினரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வாக்குச் சீட்டில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக அடையா ளம் இடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.