கனகாம்பிகை குளத்தின் ஒரு பகுதியை அடாத்தாக பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.

5 months ago


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால் மண் நிரப்பப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (29) காலை 10 மணியளவில் ஏ9 வீதியில் கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒன்று கூடிய பொது மக்கள் குளம் மண் நிரப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

வீதியோடு அண்டியதாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு குளத்தை தனிநபர் ஒருவர் மண் நிரப்பி பிடித்துள்ள நிலையில் குறித்த குளத்தின் பின்பகுதி முல்லைத்தீவு மாவட்டம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான குளத்தின் பகுதிகளும் வேலியிட்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டே ஒன்று சேர்ந்த பொதுமக்கள் குளம் எங்களின் சொத்து, அனுமதிக்க மாட்மோம், அனுமதிக்கமாட்டோம் குளத்தை பிடிப்பதனை அனுமதிக்கமாட்டோம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மண் அள்ளி போடாதே, என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் குளத்தினை அடாத்த பிடிக்கப்பட்டவரின் ஆவணங்களை பரிசோதித்த போது அவர்களிடம் அதற்கான எவ்வித ஆவணங்களும் இன்மையால் உடனடியாக இரண்டு நாட்களுக்குள் நிரப்பட்ட மண்ணை அகற்றி குளத்தினை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை வழங்கினார்.

குளம் ஆக்கிரமிக்கப்படுவதன் மூலம் விவசாயிகள் மட்டுமல்ல சுற்றியுள்ள பொது மக்கள், உட்பட சுற்றுப்புறச் சூழல் கால்நடைகள் என எல்லாவற்றுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் அனுமதித்தால் ஒருவர் இருவராகி இருவர் பலராகி எதிர்காலத்தில் குளமே காணமல் போய்விடும் இவ்வாறு பலகுளங்களுக்கு நடந்துள்ளது. எனவே இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார்.





அண்மைய பதிவுகள்