சம்பந்தனின் இறுதி நிகழ்வில் எல்லோரும் ஒன்றிணையுமாறு தலைவர்கள் தெரிவித்தனர்.
இரா. சம்பந்தனின் இறுதிக் கிரியை நிகழ்வு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற முக்கிய தலைவர்களின் உரைகளின் சாரம சம் வருமாறு,
அண்ணாமலை பா. ஜ. க. தமிழ்நாடு தலைவர்
சம்பந்தன் முக்கிய நோக்கத்துக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள். அத்துடன் சம்பந்தன் விட்டுச்சென்ற பணியை முன்னெடுப்பதற்காக அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
சந்தோஷ் ஜா இந்திய தூதுவர்
சம்பந்தன் வடக்கு, கிழக்குக்கு உட்பட்ட தலைவராக அல்லாது முழு இலங்கைக்கும் அவரது அறிவுரைகளை வழங்கியவராக இருந்தார். அத்துடன் அவருடைய வெற்றிடத்தினை நிரப்புவது மிகவும் கடினமாகும். எனினும் அவரின் இட்சியங்களை அடைவதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
மனோகணேசன் தலைவர், தமிழ் முற்போக்கு கூட்டணி
பிரபாகரன் ஆயுதத்தால் பெறமுடி யாத விடயத்தை சம்பந்தன் பேச்சு மூலம் பெறப் பார்க்கிறார் என்று சிங்களத் தலைவர்கள் தவறாக பிரசாரம் செய்தார் யகள் - பொய்யுரைத்தார்கள். அந்த நிலைமை இன்னமும் மாறவில்லை.
இந்த நிலைமை மாறும் வரையில் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் இரண்டாவது மூன்றாவது பிரஜைகளாக வாழ விரும்பவில்லை. எதிர்வரும் காலத்தில் நிலைமைகள் மாற்றப்பட்டு பல்லினமும் சமத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ரவூப் ஹக்கீம் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம்கள் அண்ணன் சம்பந்தன் மீது கொண்டிருக்கின்ற வாஞ்சை அளவிட முடியாதது. முஸ்லிம்களையும் அரவணைத்த ஒரு தீர்வு வடக்கு, கிழக்கில் வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கு எதிராக சலசலப்புக்கள் அவ்வப்போது எழுந்த போது அதற்கு எதிராக தயங்காது சலனமில்லாது குரல் கொடுத்தார்.
ரிஷாத் பதியுதீன் தலைவர், அ. இ. மக்கள் காங்கிரஸ்
சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்துவ தாக இருந்தால் பிரிந்திருக்கின்ற தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே பொருத்தமானதாக இருக்கும். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதன் ஊடாகவே நியாயமான தீர்வை பெறமுடியும்.
சித்தார்த்தன், தலைவர் - புளொட் தந்தை செல்வநாயகம், அண்ணன்
அமிர்தலிங்கம் ஆகியோருக்கு அடுத்ததாக சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இறுதி வரையில் உறுதியாக இருந்த ஒருவரே சம்பந்தன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த தலைமைத்துவத்தில் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும்.
மாவை சேனாதிராசா தலைவர், இலங்கை தமிழ் அரசு கட்சி
தமிழ் மக்களின் தந்தையான செல்வா போன்று சம்பந்தனும் தமிழ் மக்களினால் பெருந்தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருக்கின்றார். அதே போன்று அவர் தொடர்ச்சியாக முன் வைத்து வந்த விடயமான உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு தமிழ் மக்கள் உரித்து டையவர்கள் என்பதை இங்குள்ள தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
செந்தில் தொண்டமான் ஆளுநர், கிழக்கு மாகாணம்.
சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களின் அடையாளத்தின் மறைவாகும். ஆகவே, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அவருடைய இலட்சியத்தை அடைவதற்காக தொடர்ந்தும் பயணிக்கும் என்று நம்புகின்றேன்.
சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை தமிழ் அரசு கட்சி
சம்பந்தன் அனைத்து விடயங் களிலும் அர்ப்பணிப்புடன் காணப்பட்டார். அத்துடன், இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதிலும் சம்பந்தன் ஆத்மார்த்தமான அள வில் உறுதியாக இருந்தார்.
நளிந்த திஸநாயக்க, தேசிய மக்கள் சக்தி
தேசிய இனப்பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். 2015இல் அதற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். ஆனால் அந்த முயற்சி யில் அவரால் வெற்றிபெற முடிந்திருக்கவில்லை.
லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்க்கட்சி பிரதம கொறடா
சம்பந்தன் எப்போதும் இனங்களின் தனித்துவத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அத்துடன் இனப்பிரச்னைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.