மோடி பிரதமரானார்

7 months ago

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. மூன்றாவது முறையாக மோடி பிரதமரானார்.

543 தொகுதிகளைக் கொண்ட இந்திய மக்களவைத் தேர்தலுக்கு 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏழாவதும் இறுதியானதுமான வாக்குப்பதிவுகள் கடந்த முதலாம் திகதி முடிவுக்கு வந்தன.

இதைத் தொடர்ந்து நேற்றுக் காலை 8 மணிமுதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

543 தொகுதிகளில், 272 தொகுதிகளைக் கைப்பற்றும் தரப்பு ஆட்சியமைக்கும் என்ற நிலையில், 290 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெறும் என்ற தோற்றப்பாடே இருந்தது.

235 தொகுதிகளில் 'இண்டியா' கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

பா.ஜ.க.வின் வெற்றி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் அந்தக் கட்சி செல்வாக்கை இழந்துள்ளதாகவே கருதப்படுகின்றது.

ஏனெனில், கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்களவைத் தேர்தலில் 359 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த வருடம் பா.ஜ.க.வால் 290தொகுதிகளையே கைப்பற்ற முடிந்தமை அதன் செல்வாக்குச் சரிந்துள்ளதையே காண்பிப்பதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.கூட்டணி அமோக வெற்றிபெற்றது.

இம்முறை திராவிடக் கட்சிகளிடம் இருந்து ஆட்சியைப் பறிப்பது என்பதில் பா.ஜ.க. அதி தீவிரத்துடன் செயற்பட்டு வந்தது.

இரண்டு மாதங்களில் ஏழு தடவைகள் மோடி தமிழகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இவற்றையெல்லாம் தாண்டி தி.மு.க. பெற்றுள்ள வெற்றி பேரெழுச்சி என்றே கருதப்படுகின்றது.

இதேபோல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.