சுமந்திரன் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸில் முறைப்பாடு

2 months ago



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், உண்மைக்குப் புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில்            முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில்          முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மன்னாரிலுள்ள தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே சாள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் உண்மைக்குப் புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊட கச் சந்திப்பு ஒன்றில் சுமந்திரன் கூறியிருந்தார்.

இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை                 மேற்கொள்ளுமாறு பொலிஸ்   நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகளின் நிமித்தம் நான் அந்த சந்திப்புகளை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன்.

அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்பத்தி மதுபானசாலைகளை                அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்குப் பொறுப்பாக முடியாது என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.