ஒன்ராரியோவின் மில்டன் நகரில் லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு வென்ற தம்பதியினர் ஓய்வு பெற்றுக் கொள் கொன்றனர் என அறிவித்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் இந்த தம்பதியினர் 55 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளனர்.
லவுரான் சாஹில் மற்றும் டோல்ட் ஹாவாக் ஆகிய இருவருமே இவ் வாறு பாரிய தொகை பணப் பரிசை வென்றுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக இருவரும் லொத்தர் சீட்ழுப்பில் பங்கேற்று வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் தங்களது ஓய்வை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாரியத்தொகை பணப் பரிசு வென் றெடுக்கப்பட்டது அறிந்து கொண்டதும் தாம் அதிர்ச்சி அடைந் தனர் எனவும், நாவறண்டு போன தாகவும் பேச முடியாத நிலை காணப் பட்டதாகவும் அவர்கள் தெரிவிக் கின்றனர்.