இலங்கையில் கடலோர படையினருக்கு அமெரிக்கா புதிய கடல்சார் பயிற்சி நிலையம் ஒன்றை திறந்து கூட்டாண்மையை மேம்படுத்துகிறது.

4 months ago


இலங்கையில் கடலோர பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா புதிய கடல்சார் பயிற்சி நிலையம் ஒன்றை திறந்து கூட்டாண்மையை மேம்படுத்துகிறது.

இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கினால் கடல்சார் பயிற்சி நிலையம் கிரிந்தவில் உள்ள இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் மேம்பட்ட பயிற்சி மையத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த பயிற்சித் திட்ட மானது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

இந்த நிகழ்வில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பயற்சி திட்டத்தின் மூலம், கடற்கொள்ளை களை எதிர்த்தல், விசேட பயிற்சிகள், கடத்தல்களை எதிர்த்தல், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்நிகழ்வில், இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அண்மைய பதிவுகள்