ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவில் இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ஆஷா டி வோஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள உலகெங்கிலுமுள்ள 7 உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.
இந்தக் குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளது.