மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக உக்ரைன் முன்னாள் இரா ணுவத் தளபதியும் பிரிட்டன் உக்ரைன் தூதுவர் வலேரி ஜலுஷ்னி தெரிவிப்பு

1 month ago



ரஷ்யா - உக்ரைன் இடையே 1000 நாட்களைக் கடந்து உக்கிர போர் இடம்பெற்று வரும் நிலையில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் இரா ணுவத் தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய      உக்ரைன் தூதுவருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் ஜலுஷ்னி கூறுகையில்,

"ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது என்று அர்த்தம்.

இதனால் 2024ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வட கொரிய ஆயதக் குழுக்களைச் சேர்ந்தவர்களை குர்ஸ்க் பகுதியில் நிலை நிறுத்தியிருப்பதாகவும்,            உக்ரைனுக்கு எதிராக ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும்  கூறப்படுகிறது.

உக்ரைன் அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து வருகிறது.

ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது.

வடகொரியாவைச் சேர்ந்த படையினர் உக்ரைனுக்கு முன்னாள் உள்ளனர்.

உக்ரைனில், ஈரானிய படையினர் பொதுமக்களை எந்தவித பாரபட்சம் இல்லாமல் கொல்கிறார்கள்.

உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

ஆனால் உக்ரைன் போரை நிறுத்துவது கூட இன்னும் சாத்தியம் தான்.

சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை.

உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது      அனைவருக்கும் தெரிந்ததுதான்"- என்றார்.