இந்தியாவின் வடக்கு பகுதி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

3 months ago


இந்தியாவின் வடக்கு பகுதி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையத்தின் (GFZ) படி, ரிக்டர் அளவுகோலில் 5.8 அளவுள்ள நிலநடுக்கம் இன்று மதியம் 12:58 மணியளவில் பாகிஸ்தானை தாக்கியதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்கவ மாகாணங்கள் மற்றும் மத்திய தலைநகர் பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்மைய பதிவுகள்