யாழில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

4 months ago


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.

அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி , யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்வெட்டில் இருந்த தகவலின் படி ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம, அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது.

இவ்வாலயத்தின் கற்பக்கிரகத்தின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட கிரக சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாலயமானது 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமென்பதுடன் ஆலயத்தின் பெயர் பிரகேதீஸ்வரர் என்பதனையும் இக் கல்வெட்டில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது.

மிகத் தொன்மையான முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முன்னாள் உத்தியோகத்தர் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அண்மைய பதிவுகள்