உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடி, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்குச் சென்றார். போலந்து நாட்டிலிருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்த மோடி, அங்குள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
பிறகு இரு தலைவர்களும் அங்கிருந்த மல்ரிமீடியா காட்சிக் கூடத்துக்கு சென்றனர். அங்கு ரஷ்யாவுடனான போரில் ஏராள மான குழந்தைகள் கொல்லப்பட் டமை தொடர்பான காட்சிகளை மோடி பார்வையிட்டார். பிறகு இரு தலைவர்களும் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்றனர். ஏராளமான பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் பிரதமர் மோடி கூப்பிய கரங்களுடன் அமைதியாக பிரார்த்தனை செய்தார்.பிறகு சிறிய பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
