மட்டக்களப்பு காத்தான்குடி பூநொச்சிமுனையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

5 months ago


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூநொச்சிமுனை பச்சை வீட்டுத்திட்டம் என்னும் குடியேற்ற கிராமத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.

வீட்டின் அறையொன்றிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாரிய சேதங்கள் ஏற்படாத நிலையிலும் பாரியளவிலான சப்தம் மிக நீண்ட தூரத்துக்கு கேட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியில் இருந்து விழுந்த நீல நிறத்திலான பொருள் ஒன்று வீட்டின் ஓட்டை உடைத்துக்கொண்டு சென்றதாக வீட்டில் தங்கியிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைய பதிவுகள்