சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் அவருக்கு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறத் தடை

சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
41 வயதான அசங்க மத்யூ பொடியப்பு ஹாமி லகே, ஒரு மொழிபெயர்ப்பாளருடனும் இரண்டு ஆதரவாளர்களுடனும் மெல்போர்ன் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் மற்றொரு பயணி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கடந்த டிசெம்பர் 18ஆம் திகதி மெல்போர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பொடியப்பு ஹாமிலகே விமானப் பயணத்தின் போது அநாகரீகமான செயலைச் செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சம்பவம் நடந்த மறுநாளே அவர் முதலில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவருக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டிருந்தது.
அவரது கடவுச்சீட்டை ஒப்படைத்தல், மாநிலத்திற்குள் தங்குதல், வாரத்திற்கு மூன்று முறை பொலிஸாரிடம் அறிக்கைச் செய்தல் மற்றும் வீட்டு ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுதல் ஆகியவை இதில் அடங்கும்.
நீதிமன்றத்தில், அவரது சட்டத்தரணி, க்ளென் வேவர்லியில் தனியாக வாழ அனுமதிக்க அவரது பிணை நிபந்தனைகளில் மாற்றம் கோரினார் ஜனவரி 30 ஆம் திகதிக்குள் சிசிரிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை அவரது வாதத்துக்கு பொலிஸார் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
