கிழக்கு மாகாணம் கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை படைத்துள்ளான்.

3 months ago


கிழக்கு மாகாணம் கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை படைத்துள்ளான்.

ஐக்கிய இராச்சியத்தைத் தலைமையகமாக கொண்ட உலகளாவிய சாதனை புத்தக நிறுவனத்தால் உலக சாதனை யாளர்களை இனம் காண்பதற்கான போட்டி இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதையுடைய மாணவன் நஸ்மி அக்லான் பிலால் புதிய உலக சாதனையாளனாகத் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்த மாணவன் பத்தின் 100 ஆம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 செக்கன்களில் வேகமாகக் கூறி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

இச்சாதனை செய்தமைக்காக அந்த நிறுவனத்தால் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி மாணவன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றும் இயன் மருத்துவர் அஸ்ரப் பாத்திமா பஸீஹா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்