நடிகை தமிதா அபேரத்னவை இரத்த மாதிரியை பரிசோதிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு.
8 months ago

நடிகை தமிதா அபேரத்னவை இரத்த மாதிரியை பரிசோதிப்பதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி சோதனையாளர் முன்னிலையில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,சோதனையாளர் முன்னிலையில் முன்னிலையான பிரதிவாதிகளான தமிதா அபேரத்ன, சச்சினி கௌசல்யா மற்றும் மொரீன் நூர் ஆகியோர் இரத்த மாதிரியை வழங்குமாறு நீதிவான் வழங்கிய உத்தரவுக்கு இணங்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
