கனடாவில் படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் லாம்டோன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட மீட்பு பணியாளர்களின் மீட்பு பணிகளுக்கு அமெரிக்க கரையோர பாதுகாப்பு பிரிவினரும் உதவி வழங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு தேவையற்ற வகையில் வருகை தருவதனை தவிர்க்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
படகு கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.