யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலா சாலை கிறிஸ்தவ மன்றம் நடத்திய ஒளி விழா கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நேற்று(04) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி கிறிஸ்தவ பாட விரிவுரையாளர் அ. ஜேம்ஸ் மெய்ஷானும் கௌரவ விருந்தினராக யாழ். மறை மாவட்ட மறைக் கல்வி நடுநிலைய இயக்குநர் அருட் பணி டியூக் வின்சென்ட் அடிகளாரும் விசேட விருந்தினராக கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளர் வ.சி.குணசீலனும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ் ஆயர் இல்ல மறைஅலை ஊடக இணைப்பாளர் அருட்பணி அ.அன்ரன் ஸ்ரிபன் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.
கிறிஸ்தவ மன்றக் காப்பாளர் பிரபாலினி தனம் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில் ஒளி விழா போட்டிகள் தொடர்பான பரிசளிப்பு மற்றும் ஆசிரிய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.