மட்டக்களப்பில் 2 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது

2 months ago



மட்டக்களப்பில் காணி விவகாரம் தொடர்பில் இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கல்லடி பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்தமைக்கான வரி தொடர்பில் 2 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக குறித்த அதிகாரி கோரியுள்ளார்.

இதனையடுத்து காணிக் கொள்வனவு செய்தவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான நேற்று முன்தினம் பகல் கல்லடியிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பகுதியில் மாறு வேடத்தில்    கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண் காணிப்பில் ஈடுபட்டுக்              கொண்டிருந்தனர்.

இதன்போது காரியாலயத்துக்கு வெளியில் வைத்து குறித்த அதிகாரி 2 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.



அண்மைய பதிவுகள்