கை, கால்கள் முறிப்பு: தலைக் காயத்தால் சாவு - பால்குடிக்க மறுத்ததாலேயே சித்திரவதை செய்ததாக தாயார் வாக்குமூலம்

5 months ago



குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு சித் திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழைப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

மேலும், சம்பவம் தொடர்பில் குழந் தையின் தாயை வளர்த்த இருவரை யும் குழந்தையின் தந்தையும் தெல் லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர் .

அளவெட்டியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற 45 நாள் குழந்தை நேற் று முன்தினம் உயிரிழந்திருந்தது. தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்றுக் கிடந்ததாக தாய், குழந்தையை அளவெட்டி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார். குழந்தையை அங்கி ருந்து தெல்லிப்பழை மருத்துவம னைக்கு மாற்றியபோது, குழந்தை உயிரிழந்துள்ளதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உடற்கூற்றுப் பரிசோதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப் பட்டது.

இதன்போது குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை சிரி ஸ்கான் ஊடாகக் கண்டறியப்பட்டது. அத்துடன் உடலில் கண்டல் காயங்களும் காணப்பட்டுள்ளன. குழந்தையின் உயிரிழப்பு இயற்கையானது அல்ல எனவும் குழந்தையின் தலையில் உள்ள மிகப்பெரிய காயம் காரணமாகவே இறப்புச் சம்பவித்துள்ளதாகவும் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை எனவும், குழந்தை பால் குடிக்க மறுத்தமையால் கைகள், கால்களைத் திருகினேன் எனவும் தாய் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸாரின் விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலேயே இந்தக் குழந்தையும், ஒரு வயதுள்ள மற்றொரு குழந்தையும் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.