மகள்களின் நிர்வாண படங்களை விற்ற தாய் கைது

6 months ago

முல்லைத்தீவில் சிறுமிகளான தனது இரு பிள்ளைகளையும் நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொலி எடுத்து பலருக்கும் அனுப்பி பணம் பெற்ற தாயாரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர் 34 வயதானவராவார். இவர்  தனது 13, 6 வயது மகள்களின் நிர்வாண ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளையே பிறருக்கு விற்பனை செய்துள்ளார் என்று தெரியவருகின்றது.

சிறுமிகளில் ஒருவர் தனது சிறிய தாயாருக்கு விவரத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணையில், சிறுமிகளின் ஒளிப்படங்கள், காணொலிகள் மட்டுமின்றி அந்தப் பெண்ணின் அந்தரங்க படங்களும் சிக்கின.

இவற்றை அந்தப் பெண் பலருக்கும் அனுப்பியமையும் தெரிய வந்துள்ளது.

கைதான பெண் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரின் மனநலனை பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், வழக்கு முடியும் வரை இரு மகள்களையும் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.