கனடாவில் மொன்ட்றியலில் ரெக்ஸ்ப்ரோ பகுதியில் 7 மாத குழந்தை ஒன்றுடன் கார் ஒன்று களவாடப்பட்டது.
பின்னர் பொலிஸார் குழந்தையுடன் காரை மீட்டனர். காரின் பின் இருக்கை பகுதியில் இந்த 7 மாத குழந்தை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது
வெள்ளை நிற மெஸ்டா ரக கார் ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. வாகனத்திற்குள் ஏழு மாத சிசு ஒன்று இருப்பது தெரியாமலேயே சம்பந்தப்பட்ட நபர் வாகனத்தைக் களவாடிச்சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வாகன திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் களவாடப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடித்தனர்.
இந்த களவாடப்பட்ட வாகனம் சிறு விபத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
விபத்தை மேற்கொண்ட சந்தேகநபர் காரை விட்டு இறங்கித் தப்பித்துச் சென்றுள்ளார்.
ஏழு மாத சிசு பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகனத்தை களவாடிய நபர் இது வரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிசுவைத் தனித்துக் காரில் விட்டுச் சென்ற தாய்க்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்படுமா என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.