நாடு முழுவதும் வானிலை பேரழி வுகளால் அதிக தொகை விரயமான வருடமாக 2024 உள்ளது.
2024இல் வானிலை தொடர்பான பேரிடர்களின் மொத்தச் செலவு இது வரை 5.15 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது என பேரழிவு குறியீ டுகள் மற்றும் அளவுபடுத்தல் நிறுவ னம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொகை 2016 இல் சாதனை படைத்த காப்பீட்டுத் தொகையான 5.06 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.
மேலும் இந்த வருடம் இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இதுவரை ஏற்பட்ட மிக விலையுயர்ந்த பேரழிவு ஓகஸ்ட் 5 அன்று கல்கரியில் பதிவான ஆலங் கட்டி மழை ஆகும்.
இது காப்பீட்டாளர்களுக்கு 2.06 பில்லியன் டொலர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
புயல், விமான நிலையம் உட்பட வடக்கு கல்கரியில் 35,000 கட்டடங்க ளுக்கு சேதம் விளைவித்ததாக மதிப் பிடப்பட்டுள்ளது.
1 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட மற்றொரு விலையுயர்ந்த புயல் தெற்கு ஒன்ராறியோவில் ஏற்பட்ட வெள்ளம் ஆகும்.
குறிப்பாக றொரன்ரோவில் ஜூலை 16 அன்று பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது,
வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டு, சாலை மூடப்பட்டது மற்றும் ஏராளமான உள்கட்டமைப்பு சேதங்களை ஏற்படுத்தியது.
ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங் களில் பேரழிவை ஏற்படுத்திய ஜெஸ்பர் காட்டுத்தீ காப்பீட்டாளர்களுக்கும் விலை உயர்ந்தது.
வீடுகள், வணிகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் 880 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது