கிளிநொச்சியில் மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து சடலமாக மீட்பு
2 months ago




கிளிநொச்சியில் மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து சடலமாக மீட்கப்பட்டார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.
சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த பொழுது மீண்டும் குளத்தில் பாய்ந்துள்ளார்.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போனவர்.
பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்களால் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
